இப்படி தானாவா அவுட் ஆவீங்க! தட்டிக் கொடுத்த குயிண்டன் டிகாக்: பரிதாபமாக வெளியேறிய பேர்ஸ்டோவ்
மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி வீரர் பேர்ஸ்டோவ் ஹிட் அவுட் முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி எடுத்திருந்த 150 ஓட்டங்களை எட்ட முடியாமல், ஹைதராபாத் அணி தோல்வியை சந்திதது.
இந்நிலையில், இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவ், மும்பை அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடிக் கொண்டிருந்தார்.
இவரும், வார்னரும் களத்தில் இருக்கும் வரை ஹைதராபாத் அணி வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், அதிர்ஷ்டவசாம ஜானி பேர்ஸ்டோவ் ஹிட் முறையில், மிகவும் அரிதிலும், அரிதான முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது மும்பை அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் அவரை தட்டிக் கொடுத்தார்.
கிரிக்கெட் உலகில் இது போன்று சர்வதேச வீரர்கள் ஹிட் முறையில் அவுட் ஆவது, மிகவும் அரிதானது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.