8 சிக்ஸர்கள்! பம்பரமாய் சுழன்று அடித்த பேர்ஸ்டோவ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது முதல் டி20 போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 7 பந்துகளில் 22 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மாலன் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ஓட்டங்கள் எடுத்து மிரட்டினார்.
அதன் பிறகு கைகோர்த்த பேர்ஸ்டோவ் மற்றும் மொயீன் அலி இணை, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக்கியது. மொயீன் அணி 18 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் வாணவேடிக்கை காட்டிய பேர்ஸ்டோவ் 53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.
Utter carnage ?
— England Cricket (@englandcricket) July 27, 2022
We set SA 235 to win ?
Scorecard/clips: https://t.co/PAcXkPJJwc
??????? #ENGvSA ?? pic.twitter.com/SEFvPJt1Kx
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தினால் 234 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 33பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
PC: Getty Images
டி காக், மில்லர் ஆகியோர் சொதப்பிய நிலையில், ஸ்டப்ஸ் அதிரடியாக 28 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 193 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், இங்கிலாந்து அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் க்ளீசன் 3 விக்கெட்டுகளையும், டாப்லே மற்றும் அடில் ரஷித் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 52 ஓட்டங்களுடன், ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய மொயீன் அலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் இன்று நடக்க உள்ளது.
PC: AFP
PC: Reuters