உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற வீரர்.. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஏற்பட்ட நிலை
டி20 உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியா செல்லும் வீரர்களுக்கு முதலில் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்
பேர்ஸ்டோவ் 66 டி20 போட்டிகளில் 8 அரைசதம் உட்பட 1337 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜானி பேர்ஸ்டோவ் இடம்பெற்றிருந்தார்.
மோசமான ஃபார்ம் காரணமாக ஜேசன் ராய்க்கு பதிலாக பேர்ஸ்டோவ் விளையாட இருந்தார். ஆனால் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், கோல்ஃப் விளையாடும்போது அடிபட்டதில், பேர்ஸ்டோவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
PC: Reuters Photo
அதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மாதம் காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் பேர்ஸ்டோவ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பேர்ஸ்டோவ், 'துரதிர்ஷ்டவசமாக, எதிர்காலத்தில் என்னால் அனைத்து விளையாட்டுகள்/சுற்றுப்பயணங்களிலும் இருக்க முடியாது. காரணம் என்னவெனில், விபத்தொன்றில் எனது கீழ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இன்று காலை கோல்ஃப் மைதானத்தில் தவறி விழுந்தபோது காயம் ஏற்பட்டது.
PC: Twitter
நான் தைரியமாக இருக்கிறேன், இந்த வாரம் ஓவல் மைதானத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன் மற்றும் டி20 உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியா செல்லும் வீரர்களுக்கு முதலில் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பேர்ஸ்டோவுக்கு பதிலாக பென் டக்கெட் அல்லது ஹாரி ப்ரூக்ஸ் விளையாடுவார் என கூறப்படுகிறது. ஆனால் உலகக் கோப்பை அணியில் அவருக்கு பதிலாக யார் களமிறக்கப்படுவார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.