டக்அவுட் ஆவதில் மோசமான சாதனை செய்த இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அதிக முறை இந்திய அணிக்கு எதிராக டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
ஜானி பேர்ஸ்டோவ்
ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி துடுப்பாடி வருகிறது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 224 ஓட்டங்கள் எடுத்தபோது 3வது விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) களமிறங்கினார்.
4 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் LBW முறையில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவர் இந்திய அணிக்கு எதிராக 8வது முறையாக டக்அவுட் ஆனார்.
@PTI
இதன்மூலம் பேர்ஸ்டோவ் அதிகமுறை இந்திய அணிக்கு எதிராக டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்தார்.
98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பேர்ஸ்டோவ் 5902 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 12 சதம் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும்.
இந்திய அணிக்கு எதிராக அதிக டக்அவுட் ஆன வீரர்கள்
- ஜானி பேர்ஸ்டோவ் - 8 (37 இன்னிங்ஸ்)
- டேனிஷ் கனேரியா - 7 (15 இன்னிங்ஸ்)
- நாதன் லயன் - 7 (40 இன்னிங்ஸ்)
- ஜேம்ஸ் ஆண்டர்சன் - 6 (52 இன்னிங்ஸ்)
- மெர்வின் டில்லான் - 6 (15 இன்னிங்ஸ்)
- ஷேன் வார்னே - 6 (22 இன்னிங்ஸ்)
@AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |