33 வயது வித்தியாசத்தில் உறவு..11 லட்சம் செலவு செய்த நீங்கள் பேசலாமா? பப்லு பிரிதிவிராஜை விளாசிய பயில்வான் ரங்கநாதன்
நடிகர் பிரிதிவிராஜ் தனது பெண்தோழி ஷீத்தலை பிரிந்த நிலையில், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மீண்டும் அவரை விமர்சித்துள்ளார்.
பப்லு பிரிதிவிராஜ்
திரைத்துறையில் பிரபலமான நடிகரான பப்லு பிரிதிவிராஜ் (57), தன்னை விட 33 வயது இளம்பெண்ணான ஷீத்தல் (24) லிவிங் உறவில் இருந்தார்.
இவர்கள் இருவரின் உறவு முறிந்து விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு கண்டனம் தெரிவித்து பயில்வான் கூறும் விடயங்களில் பல பொய்கள் உள்ளன என்றும் பப்லு பிரிதிவிராஜ் பேசினார்.
பயில்வான் ரங்கநாதன்
இந்த நிலையில் பிரிதிவிராஜ் குறித்து மீண்டும் கடுமையாக விளாசி பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், 'பப்லு ஷீத்தல் பிரிவு பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் நான் பேசியதை மட்டும் அவர் குறிப்பிட்டு என்னை திட்டியிருக்கிறார். உண்மை சுடத்தான் செய்யும்.
பிறந்தநாளை 11 லட்சம் செலவு செய்து கொண்டாடியதாக நீங்கள் பப்லு கூறினீர்கள். மேலும் ஷீத்தல் ஸ்டார் ஹொட்டலில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியவுடனேயே, அதற்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தீர்கள்.
எல்லா தவறையும் நீங்கள் செய்துவிட்டு இப்போது என் மீது கோபப்பட்டால் எப்படி? நீங்கள் எல்லாம் பேசலாமா?' என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |