முழு சார்ஜில் 136 கிமீ செல்லும் Bajaj Electric Scooter! Amazon தளத்தில் விலை எவ்வளவு?
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் சேத்தக் (Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அறிமுகம் செய்த சேத்தக் 3201 என்ற புதிய எடிசனை அமேசான் (Amazon) தளத்தில் வாங்க முடியும்.
Bajaj Chetak 3201 special edition
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் சேத்தக் (Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சேத்தக் 3201 (Chetak 3201) என்ற புதிய எடிசனை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.1.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அமேசானில் (Amazon) வாங்க முடியும்.
Urban, Premium என்ற இரண்டு வேரியண்ட்களில் சேத்தக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் நிலையில், Bajaj Chetak 3201 special edition ஆனது பிரீமியம் வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் அறிமுக விலையான ரூ.1.30 லட்சத்தில் இருந்து ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.40 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வழக்கமான premium scooter -டன் ஒப்பிடுகையில் தோற்றத்தில் சற்று வேறுப்பட்டதாக உள்ளது.
இதில் ஸ்கஃப் தட்டுகள் மற்றும் இரு நிறங்களில் தையலிடப்பட்ட இருக்கை, TFT display ஆகியவை உள்ளன. இந்த ஸ்கூட்டருடன் சேர்த்து Techpack software package -யும் வாங்கலாம்.
இந்த பேக்கேஜ் மூலமாக Hill-hold control மற்றும் கூடுதலாக 'Sport' ride mode-ஐ பெறலாம். இந்த ஸ்கூட்டரில் ஒரு முழு சார்ஜில் 136கிமீ தொலைவு வரையில் பயணிக்கலாம். மேலும், அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ வேகத்தில் செல்லலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |