153 கிமீ ரேஞ்சுடன் Bajaj-ன் புதிய Chetak 35 series மின் ஸ்கூட்டர் அறிமுகம்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது பிரபலமான மின்சார ஸ்கூட்டரின் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒப்பனை மாற்றங்கள் மற்றும் மெக்கானிக்கல் மேம்பாடுகளுடன் Chetak 35 series-ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட Bajaj Chetak ஒரு புதிய சேசிஸ் சட்டத்தைப் பயன்படுத்துகிறது, இதில் பேட்டரி பேக் ஃப்ளோர்போர்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இ-ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 35 லிட்டர் இடம் கிடைக்கும்.
இந்த ஸ்கூட்டரில் பெரிய 3.5kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 153 கிமீ தூரம் வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Chetak 35 சீரிஸ் இ-ஸ்கூட்டர் என்பது நிறுவனத்தின் EV வரிசையில் டாப்-எண்ட் சீரிஸ் ஆகும். இது 3501, 3502 மற்றும் 3503 ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Chetak 3501 பைக் ரூ.1,27,243 (எக்ஸ்-ஷோரூம், பெங்களூர்), Chetak 3502 ஸ்கூட்டரின் விலை ரூ.1,19,999 (எக்ஸ்-ஷோரூம், பெங்களூர்). அதே நேரத்தில், Chetak 3503-ன் விலை அறிவிக்கப்படவில்லை.
பஜாஜ் சேத்தக் 35 சீரிஸின் Tech-Pack-கின் விலையை வெளியிடவில்லை. சேத்தக்கின் தற்போதைய மாடலுடன் வரும் டெக்-பேக் விலை ரூ.5,000 ஆகும்.
நிறுவனம் புதிய Chetak உடன் 3 ஆண்டு அல்லது 50,000 கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. சேத்தக் 35 சீரிஸ் ஆனது Vida V2, Ather Rizta, Ola S1 Pro மற்றும் TVS iQube போன்ற மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.
[J8LR1Q
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
]