Bajaj Electric Scooter மொடலில் புதிய தேர்வு.., அதுவும் 8 ஆயிரம் ரூபாய் கம்மி விலையில்
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி முன்னணி நிறுவனமான பஜாஜ், சேத்தக் (Chetak) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மொடலில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு இணைத்துள்ளது.
புதிய தேர்வு
இந்த புதிய சேத்தக் (Chetak) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மொடலானது ப்ளூ 3202 (Blue 3202) எனும் பெயரில் விற்பனைக்கு கிடைக்கும்.
இதன் அறிமுக விலை ரூ.1.15 லட்சம் ஆகும். இது Ex-showroom விலையாகும். மேலும், இது Urban-யை விட ரூ.8000 விலை குறைவானதாகும். இதனால் இது Chetak 2901 மற்றும் Urban ஆகிய வேரியண்டுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ளது.
இந்த ஸ்கூட்டரை ரூ.2000 முன் தொகையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக புக் செய்ய முடியும். முழு சார்ஜில் 137 கிமீ தூரம் வரை பயணம் செய்ய முடியும். மேலும், 2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
USB charging port, illuminated ஆகும் திறன் கொண்ட switch gear, Smart key ஆகிய அம்சங்கள் உள்ளன. Eco, Sport, Crawl ஆகிய மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் நிறத்தை பொறுத்தவரை ரூக்ளின் பிளாக் (Brooklyn Black), சைபர் ஒயிட் (Cyber White), இன்டிகோ மெட்டாலிக் (Indigo Metallic) மற்றும் மேட் கோர்ஸே கிரே (Matte Coarse Grey) ஆகிய 4 ஆப்ஷன்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |