Bluetooth வசதியுடன் களமிறங்கிய Pulsar! மொடல் மற்றும் விலை குறித்த விவரங்கள்
பஜாஜ் நிறுவனத்தின் Pulsar மொடல் பைக்குகள் புளூடூத் இணைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
என்ன மொடல்
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மொடல் பைக்குகள் தற்போது அப்டேட்டுகள் ஆகியுள்ளது.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ( Pulsar N150 and N160) ஆகிய இரு பைக்குகளும் புளூடூத் இணைப்புடன் (Bluetooth connectivity) அறிமுகப்படுத்தப்பட்டது.
பல்சர் என்150 ( Pulsar N150) விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 (Pulsar N160) விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இரண்டு பைக்குகளிலும் Bluetooth connectivity அம்சம் உள்ளது. இதனால் Pulsar N150 மற்றும் Pulsar N160 பைக்கை ஓட்டும் போது உங்களுக்கு அழைப்புகள் வந்தால் அதனை ஏற்கவும், துண்டிக்கவும் முடியும்.
இந்த அழைப்பு டிஜிட்டல் எல்சிடி டிஸ்பிளே (Digital LCD display) மூலம் நாம் பார்த்துக் கொள்ள முடியும். உங்களது இடது கை சுவிட்ச் கியரில் (switchgear) உள்ள பட்டனைப் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
சிறப்பம்சங்கள்
Pulsar N150 மற்றும் Pulsar N160 பைக்குகளின் display -வில் தொலைபேசியின் பற்றரி மற்றும் சிக்னல் காட்டும். இதனை தவிர Speedometer, gear position indicator, Mileage மற்றும் எரிபொருள் திறனை பார்க்க முடியும்.
மேலும், இந்த இரு பைக்குகளிலும் எந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை. Pulsar N150 பைக்கானது 149.6 cc திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சினையும், Pulsar N160 பைக்கானது 165 cc திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சினையும் கொண்டுள்ளது.
சராசரியான மைலேஜை கொடுப்பதால் இளைஞர்களுக்கு தகுந்த தேர்வாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |