பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் 2026-ல் அறிமுகம்
பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் 2026-ல் அறிமுகமாகவுள்ளது.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் (Bajaj Auto), தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கிவருவதாக அதிகாரப்பூர்வாமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மொடல் தினசரி பயணத்திற்கு ஏற்ற கம்யூட்டர் கைக்காக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனம், அடுத்த 6-8 மாதங்களில் அடுத்த தலைமுறை Chetak EV, 3 புதிய பல்சர் மோதல்கள் மற்றும் ஒரு புதிய ICE சப்-பிராண்டை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதோடு, முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் பிளாட்ஃபார்ம் உருவாக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா, “நாங்கள் entry-level முதல் premium high-performance வரை அனைத்து பிரிவுகளிலும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். இது ஒரு வலுவான R&D முயற்சி” எனக் கூறியுள்ளார்.
தற்போது, பஜாஜ், TVS, Hero போன்ற நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்கின்றன. ஆனால், மின்சார மோட்டார் சைக்கிள் பிரிவில் இன்னும் பெரிய அளவில் நுழையவில்லை.
இதனால், பஜாஜ் நிறுவனத்தின் இந்த முயற்சி, இந்திய சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார மோட்டார் சைக்கிள் சந்தையில் தற்போது Ola Roadster X, Revolt RV400, Oben Rorr EZ Sigma, Matter Aera போன்ற சில மாடல்கள் மட்டுமே உள்ளன.
எனவே, பஜாஜ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த துறையில் நுழைவது, வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வுகளை வழங்கும்.
பஜாஜ், தனது chetak EV மூலம் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில், அதிக பயனுள்ள மின்சார பைக்குகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.
புதிய மாடல், 2026 இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bajaj electric motorcycle India 2026, Bajaj upcoming EV commuter bike, Bajaj Pulsar electric model launch, Bajaj Chetak EV next-gen updates, Bajaj R&D electric bike platform, Bajaj high-performance electric bikes, Bajaj Auto EV expansion India market, Bajaj vs Ola Revolt electric bikes, Bajaj affordable electric motorcycle, Bajaj EV launch timeline 2026