ரூ.1000 சம்பளத்திற்கு வேலை பார்த்த நபர்.,ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?
குஜராத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த விருதாணியின் வாழ்க்கை, இன்று பல கோடி மதிப்பு கொண்ட நிறுவனத்தின் உரிமையாளாரக உயரும் அளவுக்கு மாறியுள்ளது
திரையரங்குகள் to தொழில்முனைவோர்
இந்தியாவின் குஜராத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த சந்துபாய் விருதாணி(Chandubhai Virani), 15 வயதில் குடும்பம் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட போது, தனது சகோதரர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அதில் தோல்வி அடைந்தார். இருப்பினும் தொழில் துவங்குவதற்கான எண்ணம் அவரிடம் விடாமல் எரிந்து கொண்டு இருந்தது.
திரையரங்கம் ஒன்றில் ரூ.1000 வேலை பார்த்த சந்துபாய் விருதாணி(Chandubhai Virani) அப்போது திரைப்பட ரசிகர்கள் சுவையான சிற்றுண்டுகளை விரும்புவதை கவனித்தார். அப்போது உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato Wafers) மிகவும் பொருத்தமானதாக தோன்றியது.
1982 ஆம் ஆண்டில் குறைந்த முதலீடு மற்றும் கடின உழைப்புடன் வீட்டிலிருந்தே தனது சொந்த சிப்ஸ் (Wafers) தயாரிக்கத் தொடங்கினார்.
பிறகு 1992 தன்னுடைய சகோதரருடன் இணைந்து Balaji Wafers Private Limited தொடங்கினர்.
இன்று Balaji Wafers நிறுவனம் இந்தியாவின் முதன்மை திண்பண்டங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது.
நிறுவனத்தின் சொத்து மதிப்பு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி Balaji Wafers நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.5000 கோடியாக உயர்ந்துள்ளது.
அவரது நிறுவனத்தில் மட்டும் சுமார் 7000 நபர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Balaji Wafers நிறுவனம் தற்போது ஒரு மணி நேரத்தில் மட்டும் 3,400 கிலோ சிப்ஸ்களை உற்பத்தி செய்கிறது, இது நிறுவனத்தின் மீதான உற்பத்தி திறனையும் ஈர்க்க கூடியதாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |