பிரித்தானியாவில் யூனிஸ் புயல் காற்றுக்கு மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்திய சம்பவம்! வைரல் வீடியோ
பிரித்தானியாவில் யூனுஸ் புயல் காற்று கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், காற்றில் தன்னுடைய wig பறந்துவிட, நபர் ஒருவர் அதை பிடிக்க ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இரு தினங்களுக்கு முன்னர் யூனுஸ் புயல் தாக்கியது, மணிக்கு 122 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் Barnstaple நகரில் கார் பார்க்கிங்கில் Simon Wilkes என்ற நபர் நின்று கொண்டிருக்க, அவருடைய wig காற்றில் பறந்துவிட்டது.
உடனடியாக அதை பிடிக்க அவர் ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது, இதை அவரது நண்பரே படம்பிடித்து சிரிப்பலையில் மூழ்கிவிட்டார்.
புயல் காற்று வீசும்போது மக்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்குள் இருக்கும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.