கழிவறைகளையும் விட்டு வைக்காத பலே திருடர்கள்: ஜேர்மனியில் ஐந்து பேர் கைது
ஜேர்மனியில் கழிவறைகளையும் விட்டு வைக்காத திருடர்கள் ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கட்டணக் கழிப்பிடங்களை பயன்படுத்த 0.50 யூரோக்கள் செலுத்தவேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டுமே 500 கழிவறைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்ததாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெர்லினில், கடந்த புதன்கிழமை, கழிவறைகளில் திருடிய மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து ஏராளமான நாணயங்கள் சிக்கின. அவர்களிடமிருந்து ஸ்குரூடிரைவர் போன்ற கருவிகளும் கைப்பற்றப்பட்டன.
பின்னர், மேலும் இருவர் கழிவறைகளில் திருடும்போது சிக்கியுள்ளார்கள், அவர்களிடமிருந்து மிக அதிகமான நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. ஐவரிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.