பந்தை தடுக்க வந்த டூ பிளெஸ்சிஸை தெரியாமல் தூக்கி வீசிய சிறுவன்: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் (வீடியோ)
அபுதாபி டி10 போட்டியில், பாப் டூ பிளெஸ்சிஸ் பவுண்டரியை தடுக்க முயன்றபோது தூக்கி வீசப்பட்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி வெற்றி
10 ஓவர்கள் கொண்ட டி10 போட்டி தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டெல்லி புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாப் டூ பிளெஸ்சிஸ் (Faf Du Plessis) தலைமையிலான மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டிம் டேவிட் அடித்த பந்தை தடுக்க டூ பிளெஸ்சிஸ் ஓடினார். பவுண்டரி கோட்டினை பந்து கடந்தபோது, வேகமாக வந்த அவர் எல்லையை தாண்டினார்.
Ball Boy is taking Wrestling 's Coaching also
— Rohit Baliyan (@rohit_balyan) November 28, 2024
Faf Duplessis 🤣🤣 pic.twitter.com/rMFreH4UGw
தூக்கி வீசப்பட்ட டூ பிளெஸ்சிஸ்
அப்போது அங்கிருந்த சிறுவன் பந்தை குனிந்து எடுக்க முயற்சிக்க, டூ பிளெஸ்சிஸ் அவர் மீது மோதினார்.
உடனே சிறுவன் கவனிக்காமல் எழ டூ பிளெஸ்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |