150 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்! சுழற்பந்து வீச்சில் மிரட்டிய வீரர்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்தியா 404
சாட்டோகிராமில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்க்சை தொடங்கிய வங்கதேசத்தின் தொடக்க விக்கெட்டுகளை சிராஜ் சரித்தார். அதன் பின்னர் ரஹிம் (28) சற்று தாக்குப்பிடிக்க, குல்தீப் யாதவ் தனது மாயாஜால சூழலில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@ICC
சுருண்ட வங்கதேசம்
அவரது பந்துவீச்சில் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை வீழ்ந்ததால் வங்கதேச அணி 150 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரஹிம் 28 ஓட்டங்களும், மெஹிதி ஹசன் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
@Reuters
இதன்மூலம் இந்திய அணி 254 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
A five-wicket haul from Kuldeep Yadav has helped India dominate Bangladesh.#BANvIND | #WTC23 | ? https://t.co/ym1utFHoek pic.twitter.com/ChAC1HFIjq
— ICC (@ICC) December 16, 2022
இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி ஆடி வருகிறது. தற்போது வரை இந்தியா 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
@ICC
@PTI