World Cup 2023: ஆப்கானை 156 ரன்களில் சுருட்டி பந்தாடிய வங்கதேசம்
உலகக்கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
சுருண்ட ஆப்கான்
தரம்சாலாவில் காலை தொடங்கிய உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
[ban-beat-afg-in-wc-
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும் 126 ஓட்டங்களுக்கு பின் சரிவை சந்தித்தது.
தொடக்கள் வீரர் குர்பாஸ் 47 ஓட்டங்களும், இப்ராஹிம் ஜட்ரான் 22 ஓட்டங்களும் எடுத்தனர். கேப்டன் ஷாஹிடி 18 ஓட்டங்களில் வெளியேறினார்.
நஜிபுல்லா (5), நபி (6) ஆகியோர் சொதப்பிய நிலையில், ஓமர்ஸாய் ஓரளவு போராடி 22 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால் மெஹிடி ஹசன் மிரட்டல் பந்துவீச்சில் சிக்கிய ஆப்கான் அணி 37.2 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. மெஹிடி ஹசன் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வங்கதேசம் அபார வெற்றி
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான டன்ஜிட் (5), லித்தன் தாஸ் (13) சொதப்பிய நிலையில் மெஹிடி ஹசன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
அவருடன் கைகோர்த்து ஆடிய ஷாண்டோ 59 (83) ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
வங்கதேசம் 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் வங்கதேசம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |