டெஸ்டில் அயர்லாந்தை துவம்சம் செய்த ஒற்றை வீரர்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
முன்னிலை வகித்த வங்கதேசம்
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்தது. அயர்லாந்து முதல் இன்னிங்சில் 214 ஓட்டங்களும், வங்கதேசம் 369 ஓட்டங்களும் எடுத்தன.
@Twitter (BCBtigers)
அதன் பின்னர் 155 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி 292 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக டக்கர் 108 ஓட்டங்களும், டெக்டர் 56 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச அணியின் தரப்பில் டைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளும், எபாடட் ஹொசைன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@Twitter (cricketireland)
அடித்து நொறுக்கிய முஷ்பிகுர் ரஹிம்
138 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் 51 ஓட்டங்களும், தமிம் இக்பால் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
@Twitter (cricketireland)
முதல் இன்னிங்சில் 126 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 51 ஓட்டங்களும் விளாசிய முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
@Twitter (BCBtigers)