வெற்றிக்காக இறுதிவரை போராடிய வீரர்! ஒட்டுமொத்தமாக தட்டிப்பறித்த புயல் வேகப்பந்துவீச்சு
25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய தஸ்கின் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்
62 ஓட்டங்கள் விளாசிய கொலின் அக்கர்மனுக்கு இது முதல் சர்வதேச அரைசதம் ஆகும்
ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் வங்கதேச அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஃப் ஹொசைன் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே தஸ்கின் அகமது மரண அடி கொடுத்தார். முதல் இரண்டு பந்துகளில் விக்ரம்ஜித் சிங், லீடே வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மேக்ஸ் ஓடௌட் 8 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.
Twitter (@KNCBcricket)
அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எனினும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய கொலின் அக்கர்மன் இறுதிவரை போராடினார். அணியின் ஸ்கோர் 101 ஆக இருந்தபோது அக்கர்மன் 62 (48) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி கட்டத்தில் பவுல் வான் மீக்கிரென் அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நெதர்லாந்து அணி 135 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Twitter (@ICC)
மிரட்டலாக பந்துவீசிய தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Twitter (@ICC)