கடைசிவரை போராடிய கேப்டன்! இலக்கை எட்டமுடியாமல் ஆல்அவுட்..அதிர்ச்சி கொடுத்த வங்காளதேசம்
செயின்ட் வின்சென்டில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
சவுமியா சர்க்கார் 43
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணி 6 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. சவுமியா சர்க்கார் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
The powerplay king...Akeal Hosein!🏏💪🏾#WIvBAN | #WIHomeForChristmas pic.twitter.com/CyGOd41O4d
— Windies Cricket (@windiescricket) December 16, 2024
ஜாகிர் அலி 27 ஓட்டங்களும், ஷமிம் ஹொசைன் 27 ஓட்டங்களும் எடுத்தனர். அகேல் ஹொசேன், மெக்காய் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
போராடிய அணித்தலைவர்
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணித்தலைவர் ரோவ்மன் பாவெல் (Rovman Powell) மட்டும் வெற்றிக்காக போராடினார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் 140 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காளதேச அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The Skipper is on the job!🚀🎄#WIvBAN | #WIHomeForChristmas pic.twitter.com/TOnHDGUQ7h
— Windies Cricket (@windiescricket) December 16, 2024
பாவெல் 35 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளும், மஹ்முத், தஸ்கின் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |