போட்டி முடிந்த பின் நோ பால் அறிவிப்பு! கடைசி நேர ட்விஸ்ட்.. இறுதி நொடி வரை பரபரப்பாக சென்ற ஆட்டம்
ஜிம்பாப்வே அணி வீரர் சியான் வில்லியம்ஸ் 42 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்
19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தஸ்கின் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் வங்கதேச அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேச அணி, ஷாண்டோ மற்றும் அபிஃப் ஆகியோரின் அதிரடியால் 150 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாண்டோ 55 பந்துகளில் 71 ஓட்டங்கள் விளாசினார்.
ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா, முசரபானி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், சியான் வில்லியம்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஜிம்பாப்வே, கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை மொஸாடெக் ஹொசைன் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் கிடைக்க, அடுத்த பந்தில் பர்ல் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது பந்து லெக் பைஸ் முறையில் எல்லைக் கோட்டை தொட, ஜிம்பாப்வே அணிக்கு 4 ஓட்டங்கள் கிடைத்தது. அதன் பின்னர், நகர்வா 4வது பந்தை சிக்ஸருக்கு விளாச ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நகர்வா ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் ஒரு பந்தில் ஜிம்பாப்வே 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற சூழல் உருவானது. அப்போது களமிறங்கிய முசாரபானி இறங்கி வந்து அடிக்க முயன்றபோது, பந்தை தவறவிட்டதால் அவரும் ஸ்டம்பிங் ஆனார்.
இதன்மூலம் வங்கதேச அணி வெற்றி பெற்றதாக வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடினர். ஆனால் திடீர் திருப்பமாக, விக்கெட் கீப்பர் ஸ்டம்பிற்கு முன்னே பந்தை பிடித்ததால் அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது.
A fighting fifty from the experienced Sean Williams ?#T20WorldCup | #BANvZIM | ?https://t.co/Qi8dhfgeEW pic.twitter.com/E0euDZJKE1
— ICC (@ICC) October 30, 2022
அதனைத் தொடர்ந்து மீண்டும் களத்திற்கு வந்த முசாரபானி இம்முறை நின்ற இடத்திலேயே அடிக்க முயற்சித்து பந்தை தவறவிட்டார். இதனால் வங்கதேச அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Twitter (@Cricketracker)
What a match! ?
— ICC (@ICC) October 30, 2022
Bangladesh emerge victorious after a thrilling clash against Zimbabwe!#T20WorldCup | #BANvZIM | ?https://t.co/Qi8dhfgeEW pic.twitter.com/qayCpqXi0y
வங்கதேச அணியின் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், மொஸாடெக் ஹொசைன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.