முதல் இன்னிங்ஸில் சொதப்பல்! இரண்டாவது இன்னிங்சில் மிரட்டல்..ஜிம்பாப்பேவுக்கு எதிராக வங்காளதேசம் அபாரம்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேச அணி 112 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மொமினுல் ஹக் 56
சில்ஹெட்டில் வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் 20ஆம் திகதி தொடங்கியது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் 56 ஓட்டங்களும், ஷாண்டோ 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
முஸரபாணி, மஸகட்சா தலா 3 விக்கெட்டுகளும், யாவ்ச்சி மற்றும் மாதேவெரே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்பே 273 ஓட்டங்கள் எடுத்தது. பிரையன் பென்னெட் 57 ஓட்டங்களும், சியான் வில்லியம்ஸ் 59 ஓட்டங்களும் எடுத்தனர். மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி 3வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 194 ஓட்டங்கள் எடுத்தது. மொமினுல் ஹக் 47 ஓட்டங்களும், மஹ்முதுல் ஹசன் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்
அணித்தலைவர் நஜ்முல் ஷாண்டோ (Najmul Shanto) 60 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். வங்காளதேச அணி இதுவரை 112 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. முஸரபாணி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |