தடை நீக்கம்! அஸ்டிராஜெனேகா தடுப்பூசி குறித்து பிரான்ஸ் அரசு முக்கிய அறிவிப்பு
வயதானவர்கள் இப்போது ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடலாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தரவு இல்லாததைக் காரணம் காட்டி, 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்டிராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்த கடந்த மாதம் பிரான்ஸ் ஒப்புதல் அளித்தது நினைவுக் கூரத்தக்கது..
இந்நிலையில் தொலைக்காட்சியில் பேசிய பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன், முன்னர் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 65 முதல் 74 வயதிற்குட்பட்டவர்கள் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடலாம் என கூறினார்.
75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையத்தில் Pfizer அல்லது மாடர்னா தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.
பிப்ரவரி மாத இறுதியில் பெறப்பட்ட 1.7 மில்லியன் எண்ணிக்கையில் வெறும் 2,73,000 அஸ்டிராஜெனேகா டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.