யூரோ கிண்ணம்... டாக்ஸிகளில் இங்கிலாந்து கொடிகளுக்கு தடை: மீறினால் உரிமம் ரத்து
யூரோ கிண்ணம் போட்டிகள் சூடு பிடித்துவரும் நிலையில், லண்டனில் டாக்ஸி சாரதிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்லது.
கொடி தொடர்பில் கடும் எச்சரிக்கை
லண்டனில் இயக்கப்படும் கருப்பு டாக்ஸிகளின் 125,000 சாரதிகளுக்கு இங்கிலாந்து கொடி தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறுவோர் கடும் அபராதம் செலுத்த நேரிடும் என்றும், உரிமம் ரத்தாகும் சிக்கலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்த தடை உத்தரவுக்கு டாக்ஸி சாரதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து கொடிகளை டாக்ஸிகளில் பறக்க விடுவதால் கவனம் சிதறடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும்,
குழப்பத்தில் பல சாரதிகள்
வாகனங்களில் பதிக்கப்பட்டுள்ள விளம்பரங்களைவிட டாக்ஸிகளில் இங்கிலாந்து கொடியை பறக்க விடுவதால் கவனம் சிதறிவிடுவதில்லை என்றும் பதிலளித்துள்ளனர். லண்டன் தவிர நாட்டின் எந்தப் பகுதியிலும் வாடகை டாக்ஸிகளில் இங்கிலாந்து கொடியை பறக்க விடுவதில் தடை இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் லண்டனில் மட்டும் 125,000 கருப்பு டாக்ஸிகள் உட்பட எவரும் இங்கிலாந்து கொடி அல்லது யூரோ கிண்ணம் தொடர்பான எந்த அடையாளங்களும் தங்கள் வாகனத்தில் பதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல சாரதிகள், இந்தத் தடை உத்தரவின் பின்னணி குறித்து குழப்பத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |