சுவிட்சர்லாந்தில் பர்தா அணிய தடை... ஐக்கிய நாடுகள் அமைப்பு கடும் கண்டனம்
சுவிட்சர்லாந்து சமீபத்தில் நடத்திய பர்தா அணிய தடை மீதான வாக்கெடுப்புக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு வழிவகுத்த அரசியல் பிரச்சாரத்தால், இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் ஒரு சிறு கூட்டம் நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்துவிட்டது, அது வருந்தத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 51.2 சதவிகிதம் வாக்காளர்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான பர்தா முதலானவற்றை அணிவதற்கு எதிரான சட்ட வரைவு ஒன்றிற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படக்கூடாது, அதே நேரத்தில், சட்டப்படி பர்தாவை தடை செய்வது அவர்களது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் விடயமாகும் என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் அலுவலகம், அது அவர்களது மனித உரிமைகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.