பெண் நிருபர்களுக்கு தடை - தலிபானின் பெண் பாகுபாட்டிற்கு துணை போகும் இந்தியா?
டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது.
4 ஆண்டுகால தலிபான் ஆட்சியில், பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது, 6 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில கூடாது, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல கூடாது என பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி, 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தலிபான் ஆட்சியில், அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.
டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து, பாதுகாப்பு பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர் கான் முத்தாகி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பெண்களுக்கு தடை
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இது எனது முதல் இந்திய பயணம். காபூலில் இந்தியா தனது முதல் தூதரகத்தை திறக்க உள்ளது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின் போது இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாக, நீண்ட நாகரிக மற்றும் மக்கள் தொடர்பு பிணைப்புகள் உள்ளன. இந்த பிராந்தியம் மற்றும் வரலாற்றின் முக்கியமான நாடு இந்தியா" என பேசினார்.
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, பெண் பத்திரிக்கையார்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மண்ணில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை கடைபிடிக்க தலிபான்களுக்கு அதிகாரம் வழங்கியது யார் என சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Prime Minister @narendramodi ji, please clarify your position on the removal of female journalists from the press conference of the representative of the Taliban on his visit to India.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 11, 2025
If your recognition of women’s rights isn’t just convenient posturing from one election to…
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, "பெண்கள் நாட்டின் முதுகெலும்பாக மற்றும் பெருமையக கருதப்படும் இந்தியாவில், பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத விடயத்தில், பிரதமர் மோடி தனது நிலையை விளக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
I am shocked that women journalists were excluded from the press conference addressed by Mr Amir Khan Muttaqi of Afghanistan
— P. Chidambaram (@PChidambaram_IN) October 11, 2025
In my personal view, the men journalists should have walked out when they found that their women colleagues were excluded (or not invited)
இதே போல், பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கண்டித்து ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்" என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |