சர்வதேச போட்டியில் முதல் அரைசதம்! ஜிம்பாப்வேயை அலறவிட்ட வீரர்
15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாண்டோ 309 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
24 வயதாகும் ஷாண்டோ டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேச வீரர் ஷாண்டோ தனது முதல் டி20 அரைசதத்தை அடித்துள்ளார்.
பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஜிம்பாப்வே-வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.
முதலில் துடுப்பாடிய வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் குவித்தது. மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 55 பந்துகளில் 71 ஓட்டங்கள் விளாசினார்.
A maiden T20I half-century for Najmul Hossain Shanto and Bangladesh are gathering some momentum ?#T20WorldCup | #BANvZIM | ? https://t.co/Qi8dhfgeEW pic.twitter.com/dzAi0Vn1ld
— ICC (@ICC) October 30, 2022
அவரது அரைசதத்தில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். இது அவருக்கு முதல் சர்வதேச டி20 அரைசதம் ஆகும். குறிப்பாக உலகக்கோப்பையில் தனது முதல் அரைசதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
Patrick HAMILTON