அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசிய வீரர்! படைத்த மிரட்டல் சாதனை
வங்கதேச வீரர் ஜாகிர் ஹசன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசியுள்ளார்.
சட்டோகிராம் டெஸ்ட்
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 513 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க விக்கெட்டுக்கு ஷாண்டோ-ஜாகிர் ஹசன் 124 ஓட்டங்கள் குவித்தனர். தனது அறிமுக டெஸ்டில் விளையாடும் ஜாகிர் ஹசன், 219 பந்துகளில் சதம் அடித்தார்.
ஜாகிர் ஹசன் சாதனை
இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்த 113வது வீரர் ஜாகிர் ஹசன் ஆவார்.
இதற்கு முன்பாக அமினுல் இஸ்லாம், முகமது அஷ்ரஃபுல், அபுல் ஹசன் ஆகிய வங்கதேச வீரர்கள் இந்த சாதனையை படைத்திருந்தனர். ஜாகிர் ஹசன் 224 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் அவர் 20 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@BCB
அறிமுக டெஸ்டில் சதம் விளாசிய வங்கதேச வீரர்கள்
அமினுல் இஸ்லாம் - 145 (இந்தியா)
முகமது அஷ்ரஃபுல் - 114 (இலங்கை)
அபுல் ஹசன் - 113 (மேற்கிந்திய தீவுகள்)
ஜாகிர் ஹசன் - 100 (இந்தியா)