உலகக்கோப்பை 2022: நெதர்லாந்துக்கு 145 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்
145 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது
நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லீடே முதல் பந்திலேயே அவுட் ஆனது அந்த அணிக்கு பின்னடைவாகியுள்ளது
வங்கதேச அணி 145 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. ஹோபர்ட்டில் தொடங்கிய இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர் சவுமியா சர்க்கார் 14 ஓட்டங்களிலும், ஷாண்டோ 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய லித்தன் தாஸ் (9), கேப்டன் ஷகிப் அல் ஹசன் (7) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் அபிஃப் ஹொசைன் அதிரடி காட்டினார். அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் மோசடெக் ஹொசைன் 12 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்தார்.
Twitter (@T20WorldCup)
இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் வான் மீக்கிரென், பஸ் டி லீடே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
AFP