கடைசி வரை திக் திக்..இந்திய அணியை அலறவிட்ட ஒற்றை வீரர்! கடைசி விக்கெட்டில் வங்கதேசம் வெற்றி
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
186 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா
டாக்காவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 186 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது . அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ஓட்டங்களும், ரோகித் சர்மா 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
வங்கதேச அணியின் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும், எபாடட் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் லித்தன் தாஸ் (41), ஷகிப் அல் ஹசன் (29) இருவரும் ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்தனர். ஆனால் அனமுல் (14), ரஹிம் (18) ஆகியோரை சிராஜ் வெளியேற்றினார்.
Solid fifty from KL Rahul ?
— ICC (@ICC) December 4, 2022
Follow the #BANvIND action ? https://t.co/Ymfh2IDe14 pic.twitter.com/KZUGB65dva
பின்னர் களமிறங்கிய அபிஃப் 6 ஓட்டங்களில் குல்தீப் சென் பந்துவீச்சில் நடையைக் காட்டினார். இது குல்தீப் சென்னுக்கு முதல் சர்வதேச விக்கெட் ஆகும். அடுத்து வந்த எபாடட் ஹொசைன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
Disciplined bowling from Bangladesh so far!
— ICC (@ICC) December 4, 2022
Follow the #BANvIND action ? https://t.co/Ymfh2IDe14 pic.twitter.com/Slbp0P3UdY
பயத்தை காட்டிய மெஹிதி ஹசன்
மெஹிதி ஹசன் இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய முஷ்டபிஷுர் ரஹ்மான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்தார். இதனால் மெஹிதி ஹசன் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார்.
India tighten the screws with crucial strikes ?
— ICC (@ICC) December 4, 2022
Who will win from here? ?
Follow the #BANvIND action ? https://t.co/Ymfh2ICGbw pic.twitter.com/v7xKkcfBcZ
கடைசி நிமிடம் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில், வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டபோது, மெஹிதி ஹசன் எளிதாக ரன் எடுத்து வெற்றி பெற வைத்தார். அவர் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்கதேசம் கடைசி விக்கெட்டுக்கு 42 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
A sensational tenth-wicket partnership has given Bangladesh a win to start off the series ?
— ICC (@ICC) December 4, 2022
#BANvIND pic.twitter.com/ot9w4r9Tx3