பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்! 10 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் மோதல்
பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ம் திகதி தொடங்கியது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் இன்னிங்ஸில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 113 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 448 ஒட்டங்கள் குவித்தது.
That Celebration 👶@iShaheenAfridi’s first wicket after the birth of his son! 😍#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/3x0jwtOHw3
— Pakistan Cricket (@TheRealPCB) August 24, 2024
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக Rizwan (wk) 171 ஓட்டங்களும், Saud Shakeel 141 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 167.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 565 ஓட்டங்கள் குவித்தது.
வங்கதேச அணியில் Shadman Islam 93 ஓட்டங்களும், Mushfiqur Rahim 191 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
வங்கதேச அணி அபார வெற்றி
117 ஓட்டங்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேச அணியில் Mehidy Hasan Miraz 4 விக்கெட்டுகளையும், Shakib 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Bangladesh win the first Test by 10 wickets 🏏#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/436t7yBaQk
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2024
எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 6.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 30 ஓட்டங்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 21 வருட மோதலில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக வங்கதேசம் அணி வீழ்த்தியுள்ளது, மேலும் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |