101 ஓட்டங்களில் சுருண்ட அணி! 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி..ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேசம்
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹசன் மக்முத் புயல்வேகப்பந்துவீச்சு
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சில்ஹெட்டில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி ஹசன் மக்முத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.1 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கேம்பர் 36 ஓட்டங்களும், டக்கர் 28 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேசத்தின் ஹசன் மக்முத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், எபாடட் ஹொசைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
@BCBtigers
வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பின்னர் ஆடிய வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 102 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் தமிம் இக்பால் 41 ஓட்டங்களும், லித்தன் தாஸ் 50 ஓட்டங்களும் விளாசினர்.
@BCBtigers
@BCBtigers
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹசன் மக்முத் ஆட்டநாயகன் விருதையும், முஷ்பிகுர் ரஹிம் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
@BCBtigers