சுவையான Banana Cake: ரெசிபி இதோ
வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி3 உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன.
இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு, பார்வை ஆரோக்கியம், செல் வளர்ச்சி, ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் பலவற்றை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும்.
தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.
இதனை ஆரோக்கியமிக்க வாழைப்பழத்தை பயன்படுத்தி வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 3
- மைதா- 2 கப்
- சர்க்கரை- 2 கப்
- சிட்ரிக் ஆசிட்- கால் டீஸ்பூன்
- உப்பு- ஒரு சிட்டிகை
- வெண்ணெய் - 125 கிராம்
- வெனிலா எசன்ஸ்- சில துளிகள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரைத்து கூழாக்கிய வாழைப்பழம், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அந்த கலவையுடன் மைதா மாவினை சலித்து சிறிது சிறிதாக கெட்டியில்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.
அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு பனானா கேக் கலவையை கேக் மோல்டில் ஊற்றி அதனுள் வைக்க வேண்டும்.25 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.
25 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்க வேண்டும். சுவையான பனானா கேக் ரெசிபி தயார். சூடு ஆறியதும் கேக்கை வெட்டி சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |