முகப்பொலிவை அதிகரிக்க உதவும் வாழைப்பழம்.., எப்படி பயன்படுத்துவது?
அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேன் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து முகத்தை கழுவி துடைத்து விட்டு, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும்.

இதனை முகத்தில் 15-20 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இறுதியாக முகத்தை துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வாழைப்பழ பேக்கை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |