செலவில்லாமல் வீட்டிலேயே முகத்தைப் பொலிவாக்க இந்த ஒரு இலை போதும்
சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் பொலிவிழந்து கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன.
பொதுவாக அனைவரும் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே பொலிவான முகத்தை பெற வாழை இலை ஒன்று போதும்.
சருமத்திற்கு வாழை இலை
சரும பொலிவுக்கு வாழை இலை பெரிதளவில் உதவுகிறது.
வாழை இலை, தோலில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருந்திட்டுக்கள் குறைந்து இளமையான தோற்றத்தை தருகிறது.
வாழை இலையை அரைத்து அதன் சாறுகளை முகத்தில் தடவலாம்.
இதில் உள்ள புரதம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கொலாஜன் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சருமத்தை அழகாக்க உதவியாக உள்ளது.
பருவ காலங்களில் ஏற்படக்கூடிய வறண்ட சருமம், தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பாதிப்புகளை நீக்க வாழை இலையில், மஞ்சள் கலந்து பயன்படுத்தலம்.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக உள்ளது.
வாழை சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கிறது.
எனவே வாழை இலை சாறினை மஞ்சள், கற்றாழை ஜெல் போன்றவற்றுடன் கலந்து உபயோகிக்கலாம்.
இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பெண்களின் சருமத்தைப் பொலிவாக்க பெரிதளவில் உதவியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |