தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பாயாசம்.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த சுவையான வாழைப்பழ பாயாசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நேந்திரம் பழம்- 4
- தேங்காய்- 1
- வெல்லம்- 3 அச்சி
- ஏலக்காய்- 8
- முந்திரி- 10
- நெய்- சிறிகளவு
செய்முறை
முதலில் நேந்திரம் வாழைப்பழத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து அதனை நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் தேங்காயை நன்கு அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் நறுக்கிய தேங்காய் மற்றும் நறுக்கிய முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அதே நெய்யில் மசித்த வாழைப்பழம் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின்னர் இதில் துருவிய வெல்லம் சேர்த்து கரைந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
இதற்கடுத்து இதில் தேங்காய்ப்பால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து கலந்தால் சுவையான வாழைப்பழ பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |