தினமும் ஒரு வாழைப்பழ தோல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வாழைப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் பெரும்பாலானோர் அதன் தோலை தூக்கி எரிந்து விடுவார்கள்.
ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை தூக்கி எறிய மாட்டீர்கள்.
வாழைப்பழ தோல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது, இது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது, வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலையும் சாப்பிட்டு வந்தால் தூக்கத்தை தூண்டுகிறது.
வாழைப்பழத் தோலைக் கொண்டு இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்குவதோடு, புதிதாக மருக்களும் உருவாகாமல் இருக்கும்.
வாழைப்பழ தோலில் உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
உங்கள் தமனியின் சுவர்களில் கொழுப்பு ஒட்டாமல் தடுப்பதன் மூலம் உங்கள் உடலில் இருந்து பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை அகற்ற வாழைப்பழ தோல்கள் உதவும்.
வாழைப்பழ தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கரை நீங்கும், பல் ஆரோக்கியமும் மேம்படும்.
வாழைப்பழத் தோலில் உள்ள வைட்டமின் டீ12 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நரம்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
தினமும் வாழைப்பழத் தோலில் உள்ள நார் போன்ற சதையை சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.