சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க உதவும் வாழைத்தண்டு சட்னி: 10 நிமிடத்தில் செய்யலாம்
வாழை மரத்தின் பூவில் தொடங்கி வாழைத்தண்டு வரை ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும்.
அந்தவகையில், ஆரோக்கியமான வாழைத்தண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு- 1 கப்
- காய்ந்த மிளகாய்- 2
- துவரம் பருப்பு- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- இஞ்சி- சிறிதளவு
- தேங்காய்- சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - சிறிதளவு
- கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைத்தண்டை நார் இல்லாமல் சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வத்தல், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை தனியாக எடுத்துவைத்து தொடர்ந்து கடாயில் வாழைத்தண்டை சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும்.
அடுத்து சிறிதளவு புளி சேர்த்து வதக்கி பின்னதாக வதக்கிய அனைத்து பொருட்களும் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் போதும் ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு சட்னி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |