சரும வறட்சியை போக்கி பளபளப்பை தரும் வாழைப்பழம் ! இப்படி யூஸ் பண்ணி பாருங்க
beauty tips
face
banana
By Kishanthini
மழை மற்றும் குளிர் காலத்தில் சருமம், ஈரத்தன்மையை இழந்து சொரசொரப்புத் தன்மை, வறட்சி போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று.
இதனை போக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை வீட்டிலிருந்தபடியே சரிசெய்துகொள்ளலாம்.
அதற்கு வாழைப்பழம் பெரிதும் உதவுகின்றது. இது சரும வறட்சியை எளதில் போக்க பயன்படுகின்றது.
அந்தவகையில் சரும வறட்சிக்கு எப்படி வாழைப்பழத்தை பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
- முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து, பிசைந்து கொள்ளவும். கண்களைத் தவிர, முகத்தின் பிற பகுதிகளில் பிசைந்த வாழைப்பழ கலவையை நேரடியாக தடவவும். சுமார், 15-20 நிமிடங்களுக்கு அதனை அப்படி ஊற விட்டு, பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவிடவும்.
-
பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள். பின் அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் அதை முகத்தில் கருமை படிந்த இடத்தில் அதிக கவனம் செலுத்தி, அவ்விடத்தில் தடவுங்கள். இதனை ஒரே ஒரு முறை செய்து பாருங்கள் போதும், நீங்களே வித்தியாசத்தைக் காணலாம்.
-
சிறந்த ஈரப்பதத்தை பெற வேண்டுமானால், வாழைப்பழத்தோடு தேன் கலந்து பயன்படுத்தவும். இருப்பினும், எண்ணெய் பசை உள்ள சருமம் உடையவர்கள் இந்த கலவையை பயன்படுத்துவதை தவிர்த்திடவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. குறிப்பாக குளிர்காலத்தில் இதனை செய்வது சருமத்திற்கு நல்லது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US