ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் குறிவைக்கப்பட்டிருக்கும் 5 முக்கிய வீரர்கள்!
2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது.
பலம் வாய்ந்த அணியாக இருந்தும் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வெல்லாத பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தடவை மிகச்சிறந்த வீரர்களை தேர்வு செய்து கோப்பையை தட்டி தூக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
அதன்படி ஐந்து முக்கிய வீரர்களை பெங்களூர் அணி குறி வைத்துள்ளது.
அவர்களின் பெயர் விபரங்கள்:
சுப்மன் கில், தேவதாத் படிக்கல், பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சஹால்.
இந்த ஐந்து வீரர்களும் தொடர்ந்து நல்ல பார்மில் இருப்பதால் அவர்களை அணிக்குள் கொண்டு வருவது நல்ல பலனை கொடுக்கும் என்பதே பெங்களூர் அணியின் திட்டமாக உள்ளது.