64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம் - தடுமாறும் அவுஸ்திரேலியா
2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது.
64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்
அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வங்கதேசம், 64 ஓட்டங்களில் ஆல் அவுட்.ஆனது.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா தரப்பில் மிச்சேல் ஸ்டார்க், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலியா 151 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்துள்ளது.

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |