வங்கதேசத்திடம் தொடரை இழந்த அவுஸ்திரேலியா! ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய வீரர்: வெளியான வீடியோ
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில், அவுஸ்திரேலியா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசட்த்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
அவுஸ்திரேலியா-வங்கதேச அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதன் படி முதலில் ஆடியா வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களான மொகமது நயிம் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில், சவுமியா சர்கார் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அடுத்தடுத்து வெளியேறினார்.
அதன் பின் வந்த ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் வங்கதேச அணியின் ரன் விகிதமும் சீராக சென்ற போது, ஷகிப் அல் ஹசன் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார்.
இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த மகமதுல்லா அரைசதம் அடித்து 52 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்தது.
Nathan Ellis is on fire!!! pic.twitter.com/eTcR2itQdj
— Sportzhustle_Squad (@sportzhustle) August 6, 2021
அவுஸ்திரேலியா அணி தரப்பில் நாதம் எலிஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணியில் பென் மெக்டெர்மோட்(35) மற்றும் மிட்சல் மார்ஷ்(51) அதிகபட்சமாக அடிக்க, இறுதியில் அவுஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று பின் தங்கிய நிலையில் இழந்துள்ளது.
வங்கதேச அணி அதே சமயம், அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக முதன் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.