முதல் பந்திலே ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த வங்கதேசம்! டி20-யில் அபார வெற்றி: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

BangladeshCricketTeam AustraliaCricketTeam
By Kaviarasan Aug 03, 2021 09:47 PM GMT
Report

வங்கதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், அவுஸ்திரேலியா அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

மேத்யூ வேட் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. அதன் படி டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் பந்திலே ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த வங்கதேசம்! டி20-யில் அபார வெற்றி: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bangladesh Beat Australia 23 Runs 1St T20

வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களாக மொகமது நயிம் மற்றும் சவுமியா சர்கார் களமிறங்கினர். இதில் சவுமியா சர்கார் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஹசல்வுட் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷகிப் அல்ஹசன் சிறப்பாக ஆட, மற்றொரு துவக்க வீரர் மொகமது நயிம் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

முதல் பந்திலே ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த வங்கதேசம்! டி20-யில் அபார வெற்றி: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bangladesh Beat Australia 23 Runs 1St T20

இவரைத் தொடர்ந்து மகமதுல்லா 20 ஓட்டங்கள், நூரல் ஹாசன் 3, சிறப்பாக விளையாடி வந்த ஷகிப் அல்ஹசன் 36 ஓட்டங்களில் என வெளியேற, இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜோஸ் ஹசல்வுட் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் பந்திலே ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த வங்கதேசம்! டி20-யில் அபார வெற்றி: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bangladesh Beat Australia 23 Runs 1St T20

துவக்க வீரரான அலெக்ஸ் கேரி முதல் பந்திலே டக் அவுட் ஆகி பெளவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பிலிப் 9 என வெளியேற, அவுஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தன.

இருப்பினும் மிட்சல் மார்ஷ் மட்டும் கடைசி வரை போராடிய நிலையில், அவரும் 45 ஓட்டங்களில் அவுட்டாக, அவுஸ்திரேலியா அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து.

முதல் பந்திலே ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த வங்கதேசம்! டி20-யில் அபார வெற்றி: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bangladesh Beat Australia 23 Runs 1St T20

23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக நசும் அகமத் 4 ஓவர் வீசி, 19 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. மேலும் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை கதறவிட்ட வங்கதேச அணிக்கு அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.  

முதல் பந்திலே ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த வங்கதேசம்! டி20-யில் அபார வெற்றி: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bangladesh Beat Australia 23 Runs 1St T20

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US