35.3 ஓவரிலேயே இலக்கை எட்டி..நியூஸிலாந்தை பந்தாடிய வங்காளதேச அணி
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
198 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூஸிலாந்து
வங்காளதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்தது.

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி, நாஹித் ராணாவின் (Nahid Rana) தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக நிக் கெல்லி 102 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்தார். நாஹித் ராணா 32 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணியில் சைஃப் ஹசன் 8 ஓட்டங்களிலும், சௌமியா சர்கார் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் கூட்டணி
எனினும் தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் இருவரும் கூட்டணி அமைத்து அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 141 ஆக உயர்ந்தபோது தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து 71 பந்துகளில் 50 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் ரிட்டையர் ஹர்ட் ஆகினார்.
அதன் பின்னர் டௌஹித் ஹ்ரிடோய் 30 ஓட்டங்கள் எடுக்க, வங்காளதேச அணி 35.3 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என வங்காளதேசம் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி 23ஆம் திகதி நடைபெற உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |