பாகிஸ்தானை சுருட்டி..104 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்காளதேச அணி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேச அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி இலக்கு
டாக்காவில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.

டெஸ்டின் கடைசி நாளில் வங்காளதேச அணி 268 ஓட்டங்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) 87 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நோமன் அலி, ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக் 2 ஓட்டங்களிலும், அஸான் அவைஸ் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அணித்தலைவர் ஷான் மசூட் 2 ஓட்டங்களில் நஹித் ராணா ஓவரில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த அப்துல்லா ஃபஸல் 66 ஓட்டங்களில் lbw ஆனார். 39 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த சல்மான் அஹா, விக்கெட் கீப்பர் ஷாத்மானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சரித்த வீரர்
வங்காளதேசத்தின் நஹித் ராணா (Nahid Rana) பாகிஸ்தான் அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவரது பந்துவீச்சில் மொஹம்மது ரிஸ்வான் (15), சவுத் ஷகீல் (15), நோமன் அலி (4) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
நஹித் ராணாவின் பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஷாஹீன் அப்ரிடி டக்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 163 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் வங்காளதேச அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் முதல் முறையாக தங்கள் மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
மிரட்டலாக பந்துவீசிய நஹித் ராணா 5 விக்கெட்டுகளும், தஸ்கின் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |