வங்காளதேசத்திடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் பாரிய நெருக்கடி
ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோல்வியடைந்ததால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
தசுன் ஷானகா 64 ஓட்டங்கள்
துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.
#SLvBAN #AsiaCup #SLvsBAN #INDvsPAK
— Khan (@Khanmohammed12) September 20, 2025
Two Biggest Sixes of The Asia Cup By Dasun Shanaka 💪
95 metres and 101 Metres 🔥🔥pic.twitter.com/3M5Gq7Fx44
வாணவேடிக்கை காட்டிய தசுன் ஷானகா 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்.
முஸ்தாபிஃசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், மஹெதி ஹசன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய வங்காளதேசம் 19.5 ஓவரில் 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைஃப் ஹசன் 61 (45) ஓட்டங்களும், டௌஹித் ஹிரிடோய் 58 (37) ஓட்டங்களும் விளாசினர். வனிந்து ஹசரங்கா மற்றும் தசுன் ஷானகா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணிக்கு நெருக்கடி
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றதுடன் -0.121 ரன்ரேட்டையே வைத்துள்ளது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறுவதுடன் நல்ல ரன்ரேட்டையும் பெற வேண்டிய நெருக்கடிக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |