ஜிம்பாப்பேவை பழிதீர்த்த வங்காளதேச அணி! இன்னிங்ஸ் மற்றும் 106 ரன் வித்தியாசம்..மிரட்டிய ஒற்றை வீரர்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 106 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
வங்காளதேசம் 444
சாட்டோகிராமில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்பே 227 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 444 ஓட்டங்கள் குவித்தது. ஷட்மான் இஸ்லாம் 120 ஓட்டங்களும், மெஹிதி ஹசன் மிராஸ் 104 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் வங்காளதேச அணி 217 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
அறிமுக வீரர் வின்சென்ட் மஸேகேசா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்பே, மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் டைஜூல் இஸ்லாமின் மாயாஜால சூழலில் சிக்கி 111 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இமாலய வெற்றி
இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
சதம் விளாசியதுடன் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றிய மெஹிதி ஹசன் மிராஸ் (Mehidy Hasan Miraz) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரு விருதுகளையும் வென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |