வங்கதேசம் படைத்த வரலாற்று சாதனை: அதிர்ச்சியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா - வங்கதேசம் மோதல்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நஜ்முல் ஹூசைன் ஷாண்டே தலைமையிலான வங்கதேசம் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
டார்வினில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Bangladesh about to defeate Australia in the first test match. This is the time of decline of Australian cricket. They flop in the world cup and now Bangladesh is defeating them. They are no more a cricket power. #AUSvsBAN pic.twitter.com/KeVnTeMjV2
— Rosesh (@roseshpoet) August 16, 2026
ஸ்டீவ் ஸ்மித் மட்டும் தனி ஆளாக போராடி 71 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்கள் குவித்தது.
வங்கதேசம் அணியின் ஹசன் முகமது 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 426 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹசன் தமிம் வங்கதேச அணி சார்பில் 101 ஓட்டங்கள் குவித்தார். கேப்டன் ஷாண்டே 84 ஓட்டங்கள் குவித்தார்.
வங்கதேச அணி அபார வெற்றி
முதல் இன்னிங்ஸ் முடியும் போது வங்கதேச அணி 228 ஓட்டங்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
BANGLADESH MAKE HISTORY 🔥
— KUMAR (@kumarupdate9) August 16, 2026
For the first time ever, Bangladesh have defeated Australia in Australia in a Test match.
A historic moment for Bangladesh cricket! #BangladeshCricket #AUSvsBAN #TestCricket #Cricket pic.twitter.com/7fesB2yBY8
அவுஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் மட்டும் சதம் விளாசி(104) ஒற்றை ஆளாக போராடினார்.
இதையடுத்து 57 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
அத்துடன் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருப்பதுடன் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |