அவுஸ்திரேலியா சொந்த மண்ணில் படுதோல்வி! சம்பவம் செய்த வங்காளதேசம்
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டார்வினில் நடந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
கிரீன் சதம்
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 198 ஓட்டங்களும், வங்காளதேசம் 426 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கேமரூன் கிரீன் 104 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் 57 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம், 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஹசன் மஹ்முத் (Hasan Mahmud) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |