பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை பதம் பார்க்கும் வங்கதேசம்! வெளிநாட்டு மண்ணில் வரலாறு படைக்குமா?
நியூசிலாந்து மண்ணில் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பு வங்கதேச அணிக்கு கிடைத்துள்ளது.
நியூசிலாந்து- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுன்ட் மவுங்கானுயில் கடந்த 1ஆம் திகதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவன் கான்வே (122) சதத்தால் 328 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 458 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜாய் 78 ரன்களும், ஷான்டோ 64 ரன்களும், கேப்டன் மொமினுல் ஹக் 88 ரன்களும், விக்கெட் கீப்பர் லிட்டோஸ் தாஸ் 86 ரன்களும் சேர்த்தனர். 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
Ebadot cannot be stopped!
— ICC (@ICC) January 4, 2022
Tom Blundell is adjudged lbw and New Zealand have a lot of work to do now!
Watch #NZvBAN on https://t.co/WngPr152Th in selected regions! #WTC23 pic.twitter.com/mi571ntFcP
வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டாம் லாதம் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவன் கான்வே 13 ரன்னில் வெளியேறினார்.
ஆனால் வில் யங் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் டெய்லர் ஒரு பக்கம் நிற்க, மறுபக்கம் ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளன்டெல் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி வெளியேறினார்.
Drinks taken at the Bay Oval!
— ICC (@ICC) January 4, 2022
Ross Taylor and Will Young's partnership goes past fifty, as the pair move towards a lead late on day four.
Watch #NZvBAN on https://t.co/WngPr152Th in selected regions! #WTC23 pic.twitter.com/5FbanGeXge
ராஸ் டெய்லர் இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 147 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை நியூசிலாந்து 17 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாளைய 5-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் வங்கதேச அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
100 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் வங்கதேச அணி அந்த இலக்கை எட்டி நியூசிலாந்து மண்ணில் வரலாற்று சாதனை படைக்கும்.
Stumps, Day - 4 : New Zealand close the day leading Bangladesh by 17 runs.#BCB #Cricket #BanvsNZ pic.twitter.com/605wOUIaD3
— Bangladesh Cricket (@BCBtigers) January 4, 2022