சர்ச்சையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: வழக்கு தொடர்ந்த பொலிசார்
வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் நசீர் ஹூசைன் மீது கள்ளக்காதல் விவாகரத்தில் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நசீர் ஹூசைன் இதுவரை 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் தினத்தன்று விமானப் பணிப்பெண் தமிமா சுல்தானா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் தமிமாவின் முதல் கணவர் ரக்கிப் ஹசன் என்பவர் தான் இன்னும் அவருடன் திருமண உறவில் இருப்பதாக கூறி காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் நசீருக்கு எதிராக கள்ளத் தொடர்பு, சட்டவிரோத திருமணம் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழும், தமிமா மீது மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நசீர் ஹூசைனுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.